உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

பல்லடம்: பல்லடம் அருகே குப்புச்சிபாளையம் ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

பல்லடம் அடுத்த கரைப்புதூர் ஊராட்சி குப்புச்சிபாளையம் கிராமத்தில் ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் உள்ளது. மார்ச் 3ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் ஆகியவற்றுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. மாலை 5 மணிக்கு அல்லாலபுரம் ஸ்ரீஉலகேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து முளைப்பாரி, தீர்த்த கலசங்கள், மற்றும் விக்ரகங்கள் எடுத்து வரப்பட்டன. பிறந்து முதல் கால யாக பூஜை, விக்ரக பிரதிஷ்டை, மருந்து சாற்றுதல் உள்ளிட்டவை நடந்தன. நேற்று அதிகாலை, இரண்டாம் கால யாக பூஜையும், தொடர்ந்து, காலை 6.20க்கு செல்வ விநாயகர் கோவில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மகா தீபாராதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார கிராமங்களை சார்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !