உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐஸ்வர்ய கணபதி கோவில் கும்பாபிஷேகம்

ஐஸ்வர்ய கணபதி கோவில் கும்பாபிஷேகம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில் உள்ள, வி.ஐ.பி., நகரில் புதிதாக ஐஸ்வர்ய கணபதி கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.

இக்கோவிலில் மூலஸ்தானம், கோபுரம், முன் மண்டபம், கன்னிமூல கணபதி ஆகியவை புதிதாக கட்டப்பட்டுள்ளன. இக்கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை, 8:00 மணிக்கு நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு இன்று காலை விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன், தீபாராதனை நடைபெற உள்ளது. பொன்விழா நகர் விநாயகர் கோவிலில் இருந்து, முளைப்பாரி ஊர்வலமும், முதல் கால யாக பூஜையும் நடைபெற உள்ளது. நாளை, (6ம் தேதி) காலை, நாடி சந்தானம், யாகசாலையில் இருந்து தீர்த்தக்குடங்களை, ஊர்வலமாக எடுத்து வந்து, 8:00 மணிக்கு, கோபுரம் மற்றும் மூலஸ்தானத்திற்கு, புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம் பூஜை செய்யப்படுகிறது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை வி.ஐ.பி., நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !