ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :1421 days ago
கோவை: பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, வெ கு சிறப்பாக நேற்று நடந்தது. கோவையில் உள்ள வைணவ வழிபாட்டு ஸ்தலங்களில், ஸ்ரீநிவாசப்பொருள் கோவில் முக்கியமான வழிப்பாட்டு ஸ்தலமாகும். 112 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில், ஒன்பது முறை கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 7:00 மணி அளவில், 10வது கும்பாபிஷேக விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று, பகவான் அருள் பெற்றனர்.