கழுகூரணியில் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1410 days ago
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே கழுகூரணி கிராமத்திலுள்ள காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
காலை 9:30 மணி அளவில் விநாயகர், முருகன், காளியம்மன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதியில் உள்ள விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கழுகூரணி கிராமத் தலைவர் காமாட்சி, சரவணன், துரை, முனீஸ்வரன், கோபிநாத், கார்த்திக், களஞ்சியம், நல்லமுத்து உள்ளிட்டோர் செய்திருந்தனர்.