பழனியாண்டவர் கோயில் விழா
ADDED :1344 days ago
சோழவந்தான்: மதுரை கொடிமங்கலம் பழனி ஆண்டவர் கோயிலில் மாசி கார்த்திகையை முன்னிட்டு ருத்திராட்ச உத்தரவு வேண்டுதல் விழா நடந்தது. இதையொட்டி வைகையில் நீராடிய மருளாளி ஊர்வலமாக மேலவீடு வந்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இப்பாரம்பரிய விழாவில் சுவாமி உத்தரவு கிடைத்தால் மட்டுமே பழனி கோயில் பங்குனி உத்திர விழாவிற்கு கிராம மக்கள் மாட்டு வண்டியுடன் பாதை யாத்திரை செல்வது வழக்கம். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது. ஏற்பாடுகளை மேல வீட்டு ஆண்வழி, பெண்வழி மக்கள் செய்தனர்.