காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பிரமோற்சவ விழா துவங்கியது
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா முன்னிட்டு நேற்று கொடியோற்றத்துடன் துவங்கியது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா நேற்று பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக தீபாரதனை முடிந்து ரிஷபகொடி ஏற்றப்பட்டது.பின் விநாயகர்,சுப்ரமணியர், கயிலாசநாதர், சுந்தாம்பாள், சண்டிகேஸ்வரர், அஸ்திரவேதர் புறப்பாடு நடந்தது.பின் நவசந்தி யாக பூஜை தீபாரதனை நடந்தது.இன்று 10ம் தேதி மாலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் முடிந்து விநாயகர் முஷிக வாகனத்திலும், சுப்ரமணியர் மயில் வாகனத்திலும்,கயிலாசநாதர் சூரிய பிரபை,சுந்தராம்பாள் சந்திரபிரபை வாகனத்திலும்,சண்டிகேஸ்வர் ரிஷபவாகனத்திலம் வீதி உலா நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் 17ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. வரும் 12ம் தேதி தெப்ப திருவிழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலக்குழுவினர் தலைவர் கேசவன்,துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி,பொருளாளர் ரஞ்சன் மற்றும் அமுதா ஆறுமுகம்.சிவகணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.