உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முடுவார்பட்டியில் கொட்டாரன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

முடுவார்பட்டியில் கொட்டாரன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லுரர்: அலங்காநல்லுரர் அருகே மூடுவார்பட்டியில் பாகன் (வகையறா) பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கொட்டாரன் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி மார்ச்.,8ல் புனித தீர்த்த குடங்களை வைத்து வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கி நடந்தன. நேற்று காலை பட்டர் கோவிந்தராஜ் ஐய்யங்கார் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை பாகன் பங்காளிகள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !