துரோபதையம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :1329 days ago
மேலூர்: திருவாதவூர் துரோபதையம்மன் கோயிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. மார்ச் 15 ல் அர்ச்சுணன் தவசு நிகழ்ச்சியும், மார்ச் 16, 17 ல் அம்மன் கூந்தல் விரிப்பு மற்றும் முடிப்பு நிகழ்ச்சியும், மார்ச் 18 ல் பூக்குழி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் மேலுார், திருவாதவூர்,உலகுபிச்சன் பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.