உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேர் முகூத்தகால் நடும் நிகழ்ச்சி

கொண்டத்து காளியம்மன் கோவிலில் தேர் முகூத்தகால் நடும் நிகழ்ச்சி

அனுப்பர்பாளையம்: திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா, வருகிற 22 ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று தேர் முகூர்த்தம், ஆயக்கால் நடல், நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி, மாலை 5.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். தீபாராதனை, தொடர்ந்து, தேர் முகூர்த்தம் ஆயக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 10.00 மணிக்கு எல்லை தெய்வங்களான பட்டத்தரசியம்மன் அழைப்பு, அம்மனுக்கு பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். வருகிற 16 ந் தேதி புதன்கிழமை இரவு கிராமசாந்தி, கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !