குமரக்கடவுள் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1322 days ago
கமுதி: கமுதி அருகே மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்புபூஜை நடந்தது. இதில் முதுகுளத்தூர் சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் சார்பில் முதுகுளத்தூரில் இருந்து 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக மேலக்கொடுமலூர் முருகன் கோயிலுக்கு சென்றனர்.பின்பு முருகனுக்கு பால்,பன்னீர்,சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்பு முருகனுக்கு வெள்ளியால் அலங்கரிக்கப்பட்டு சிறப்புபூஜை, தீபாராதனை நடந்தது. சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.