சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1387 days ago
சிவகாசி: சிவகாசி அம்மன் கோவில்பட்டி வடபாகம் தெரு கட்டு சார்பில் அருள்மிகு சித்தி விநாயகர், கற்பக விநாயகர் மற்றும் கோபுர விமான மூர்த்திக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நடந்தது. மங்கலி வாத்திய இசையுடன் விநாயகருக்கு பூஜை, புண்யாஹவாசநம் இரண்டாம் கால யாக பூஜைகள், ஸ்பர்சா ஹீதி , தீரவ்யாஹுதி, உடன் மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.