திருப்புல்லாணி பங்குனி பிரம்மோற்ஸவ விழாவில் இரட்டை கருட சேவை
ADDED :1317 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவம் விழாவில் இரட்டை கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவம் விழா 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் இன்று இரட்டை கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது. ஆதி ஜெகநாதப்பெருமாள், பட்டாபிஷேக ராமர் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் அருள்பாலித்தனர். வருகிற மார்ச் 18 வெள்ளியன்று காலை 9 மணிக்கு மேல் பெரிய தேரோட்டம் நடக்கவுள்ளது. தொடர்ந்து 12 நாட்களும் காலை மாலை நேரங்களில் விசேஷ திருமஞ்சனம், வீதியுலா புறப்பாடு நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் கிரிதரன், பேஸ்கார் கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.