காமாட்சியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை
ADDED :1388 days ago
மானாமதுரை: மானாமதுரை அருகே செய்களத்தூர் காமாட்சியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடந்தது. கடம்பவன காமாட்சியம்மன் கோயில் மகா உற்சவ
விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சாமியாடிகள் அரிவாள் மேல் நின்று சாமி ஆடினர். நேற்று முன்தினம் இரவு கோயில் வளாகத்திற்குள் ஏராளமான பெண்கள் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நடத்தினர். காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.