உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றக்குடியில் பங்குனி உத்திர விழா கோலாகலம்: மார்ச் 17 தேரோட்டம்

குன்றக்குடியில் பங்குனி உத்திர விழா கோலாகலம்: மார்ச் 17 தேரோட்டம்

காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாதன் பெருமாள் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 17 தேரோட்டம் நடைபெறுகிறது.

குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் பங்குனி உத்திரத்திருவிழா மார்ச் 9 ஆம் தேதி அனுப்பி விக்னேஸ்வர பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று இரவு 8 மணிக்கு ருத்ராட்ச கேடகமும், தங்கரதமும் நடைபெறுகிறது. மார்ச் 16 இரவு 8 மணிக்கு வையாபுரியில் தெப்பம், வெள்ளிரதமும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 17 மாலை 4.30 மணிக்கும், 8 மணிக்கு திருவீதியுலாவும் நடைபெறுகிறது. மார்ச் 18 பகல் 12.15 மணிக்கு உத்திரம் தீர்த்த விழாவும், இரவு 8 மணிக்கு மயிலாடும்பாறைக்கு சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !