உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் உண்டியல் காணிக்கை ரூ.2.8 கோடி

பழநியில் உண்டியல் காணிக்கை ரூ.2.8 கோடி

பழநி : பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 2 கோடியே 8 லட்சம் கிடைத்துள்ளது. பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் மலைக்கோயிலில் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் காணிக்கையாக 907 கிராம் தங்கம், 11 ஆயிரத்து 690 கிராம் வெள்ளி கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 8 லட்சத்து 76 ஆயிரத்து 878 மற்றும் 167 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணும் பணியில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் கல்லுாரி மாணவர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !