தவழும் கண்ணனாக பல்லக்கில் வலம் வந்த அம்மன்
ADDED :1299 days ago
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி விழாவையொட்டி, நேற்று காலை அம்மன் பட்டு பல்லாக்கில் தவழும் கண்ணனாக வீதி வலம் வந்தார்.
மேலும் கோயில் முன்பு ஆயிரவைசிய மெட்ரிக் பள்ளி, தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சிக்கு ஆயிரவைசிய சபை தலைவர் போஸ் தலைமை வகித்தார். மெட்ரிக் பள்ளி செயலாளர் ராஜேஷ் கண்ணன், பொருளாளர் பிரசன்னா முன்னிலை வகித்தனர். தொடக்கப் பள்ளி செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மேல்நிலைப்பள்ளி செயலாளர் லெனின்குமார், நகராட்சித் தலைவர் கருணாநிதி, துணை தலைவர் குணா, கவுன்சிலர்கள் ஜீவரத்தினம், வசந்த கல்யாணி, கவிதா, சுகன்யா மற்றும் சபை, கல்விக்குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜெயபிரமிளா நன்றி கூறினார்.