காவடியுடன் பழநிக்கு பங்குனி உத்திர பாதயாத்திரை
ADDED :1299 days ago
வத்தலக்குண்டு: பழைய வத்தலக்குண்டு பால தண்டாயுதபாணி கோயில் சார்பில் பங்குனி உத்திர விழாவிற்கு காவடியுடன் குடும்ப சகிதமாக பாத யாத்திரை புறப்பட்டனர். பழைய வத்தலக்குண்டு முருக பக்தர்கள் பாரம்பரியமாக பழமை மாறாமல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பங்குனி உத்திர திருநாளில் பழனிக்கு பாதயாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நேற்று 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதயாத்திரையாக காவடிகளுடன் புறப்பட்டனர். பழைய வத்தலக்குண்டு, வத்தலக்குண்டு கோயில்களில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடந்தன. பின் அங்கிருந்து பழநிக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.