காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பிரமோற்சவ தேர்திருவிழா
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தையொட்டி நேற்று தேர்திருவிழா நடந்தது.
காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கடந்த 9ம் தேதி பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக தீபாரதனை முடிந்து கொடியேற்றத்துடன் துவங்கியது. பின் தினம் விநாயகர்,சுப்ரமணியர்,கலாசநாதர், சுந்தாம்பாள்,சண்டிகேஸ்வர், அஸ்திரதேவர் வீதியுலா நடந்தது. கடந்த 10ம் தேதி பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் முடிந்து விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்ரமணியர் மயில் வாகனத்திலம், கயிலாசநாதர் சூரிய பிரபை, சுந்தராம்பாள் சந்திரபிரபை வாகனத்திலும்,சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது. நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழாவில்
புதுச்சேரி சபாநாயகர் செல்வம் தலைமையில் துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ்,சீனியர் எஸ்.பி.,நாரா சைதன்யா,எஸ்.பி.,சுப்ரமணியன் ஆகியோர் வடம் பிடித்து தேர் திருவிழாவை துவக்கி வைத்தனர்.இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்துகொண்டு தியாகராஜா,தியாகராஜா என்று பக்திபரவசத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பின் தேர் பாரதியார்சாலை,கென்னடியார்வீதி,மாதாகோவில்வீதி உள்ளிட்ட முக்கிய வீதிவழியாக நிலையை வந்தடைந்தது.விழாவுக்கான ஏற்படுகளை அறங்காவலர் குழுவினர் தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம்,செயலாளர் பக்கிரிசாமி.பொருளாளர் ரஞ்சன் உள்ளிட்ட சிறப்பாக செய்து வருகின்றனர்.