வைத்தியநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா
ADDED :1297 days ago
திட்டக்குடி: திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, 15ம் தேதி சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.நேற்று காலை தேர் திருவிழாவையொட்டி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர் மற்றும் அசனாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர், அசனாம்பிகையம்மன் அலங்கரிக்கப்பட்டு, தனித்தனி தேர்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.