உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏரியூர் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் காவடி நேர்த்திக்கடன்

ஏரியூர் மலைக்கோவிலுக்கு பக்தர்கள் காவடி நேர்த்திக்கடன்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே ஏரியூர் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் காவடி சுமந்து சென்றனர். சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஏரியூர் மலை மருந்தீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 10 ல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. மார்ச் 16 ல் சுவாமி திருக்கல்யாணம் நடந்த நிலையில் நேற்று பால்குடம் காவடி எடுத்தல் நடந்தது. ஏரியூர் சேங்கைக்கரை விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து சென்றனர். கரும்புத் தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மலை உச்சியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. மாலை சுவாமி திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !