சிதம்பரம் நடராஜர் கோயிலில் பங்குனி உத்திரம் முருகப்பெருமான் தேரோட்டம்
ADDED :1359 days ago
கடலூர் : கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் பங்குனி உத்திர விழாவிற்கு முருகப்பெருமான் திருத்தேரை வடம் பிடித்து அரோகரா அரோகரா என்று கோஷம் போட்டு இழுத்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு கோயிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளிலும் முருகப்பெருமான் தேரோட்டம் நடைபெற்றது. அரோகரா அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.