வல்லடிகாரர் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :1299 days ago
மேலூர் : வெள்ளலுார் நாடு, அம்பலகாரன்பட்டியில் உள்ள வல்லடிகாரர் கோயிலில் நேற்று மாலை பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று (மார்ச் 18) மதியம் கோயிலில் கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், அன்று இரவு வெள்ளிரதத்தில் சுவாமி அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். (மார்ச்19) தேரோட்டமும், மார்ச் 20 ல் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.