திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உலக நன்மை வேண்டி சண்டி பாராயணம்
ADDED :1299 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், உலக நன்மை வேண்டி, சாது யாத்திரை நிகழ்ச்சியில், குபேர லட்சுமி ஹோமம் மற்றும் சண்டி பாராயணம் நடந்தது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், வேத யோக வாழ்க்கை அறக்கட்டளை சார்பில், சாது யாத்திரை நிகழ்ச்சியில், குபேர லட்சுமி ஹோமம், சண்டி பாராயணம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை, சாதுக்களுக்கு அன்னதானம், சத் சங்கம், மற்றும் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை கணபதி பூஜை, சங்கல்பம், கலசம் பூஜை, யந்திர ஸ்தாபனம், குபேர லட்சுமி ஹோமம், சண்டி பாராயணம், மந்திர பாராயணம் நடந்தது. நிகழ்ச்சியை இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மகேஷ் ஐயர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.