வடபழநி ஆண்டவர் கோவிலில் 3ம் நாள் தெப்ப திருவிழா விமரிசை
ADDED :1318 days ago
சென்னை : வடபழநி ஆண்டவர் கோவிலில், தெப்ப திருவிழாவின் 3ம் நாளான இன்று வெகு விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தெப்ப திருவிழா நேற்று முன்தினம் விமரிசையாக துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று, சண்முகர், வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். தெப்ப திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று, சுப்ரமணியர் வள்ளி தெய்வானை புறப்பாடு நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், இணை கமிஷனர் ரேணுகாதேவி தலைமையிலான ஊழியர்கள் செய்திருந்தனர்.