கூடலூர் முருகன் கோயில் தேர் திருவிழா: பக்தர்கள் பங்கேற்பு
ADDED :1330 days ago
கூடலூர்: கூடலூர், ஆமைகுளம் செந்தில் முருகன் கோயில் 10ம் ஆண்டு திருவிழா, 18ல் துவங்கியது. அதிகாலை 5:00 கணபதி ஹோமம், தொடர்ந்து கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை சிறப்பு பூஜையும், காலை 11:00 மணிக்கு நாடுகாணி அருகே உள்ள தடுப்பணையில் இருந்து பறவைக் காவடி ஊர்வலம் துவங்கி கோவிலை வந்தடைந்தது. பக்தர்கள் பறவை காவாடி பூட்டி; வேல் குத்தி, பால்குடம் எடுத்தும் பங்கேற்றனர். இன்று காலை சிறப்பு பூஜைகளும், தொடர்ந்து காலை 11:30 மணிக்கு திருதேர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் ஆமைக்குளம், குடோன் மற்றும் பாண்டியர் அரசு தேயிலைத் தோட்டம் பகுதிகளுக்குச் சென்று கோவிலை வந்தடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி, ஊர் மக்கள் செய்திருந்தனர்.