உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவம் விழா

கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவம் விழா

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவம் விழா நடந்து வருகிறது.

பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், 17ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, அன்ன வாகனம், சிம்ம வாகனம், முத்துப்பந்தல், அனுமந்த வாகனம், கருட வாகனம், திருக்கல்யாண உற்சவம், திருத்தேர் பவனி, குதிரை வாகன உற்சவம் ஆகியன நடந்தன. இன்று இரவு, 8:00 மணிக்கு தெப்பத்தேர் உற்சவமும், நாளை மாலை, 6:00 மணிக்கு பல்லக்கு சேவை, சந்தன சேவை, தீர்த்தவாரி, சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !