மொரட்டாண்டி கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி பூஜை
புதுச்சேரி: ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
நவக்கிரகங்களில் ஒன்றான ராகு பகவான், நேற்று பிற்பகல் 3:13 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் இடம் பெயர்ந்தனர்.அதனையொட்டி, புதுச்சேரி -திண்டிவனம் சாலை, மொரட்டாண்டி டோல்கேட் அருகில் விஸ்வரூப மகா சனீஸ்வரர் கோவிலில் உள்ள 12 அடி உயர ராகு மற்றும் கேது பவானுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.முன்னதாக காலை 7:00 மணிக்கு ராசி பரிகார ஹோமம், மதியம் 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது.பிற்பகல் 3:13 மணிக்கு, ராகு, கேது பகவானுக்கு பஞ்சலோக ஆபரண கவசம் அணிவித்து, மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பூஜைக்கான ஏற்பாடுகளை சிதம்பரம் குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்திருந்தனர்.