பொள்ளாச்சி கோவில்களில் ராகு கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ராகு, கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், ராகு, கேது பெயர்ச்சியையொட்டி, ராகு, கேது பகவானுக்கு அபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பரிகார ராசிக்காரர்கள், அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.பொள்ளாச்சி பவுர்ணமி நாக கன்னி அம்மன் கோவிலில், 16 வகையான அபிேஷகம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்றனர். திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், ராகு, கேது பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.* ராகு பகவான், நேற்று பிற்பகல் 3:13 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து, மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் யாகசாலை பூஜைகள், சிறப்பு அபிேஷகம் நடந்தது.ராகு பகவான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். - நிருபர் குழு -