/
கோயில்கள் செய்திகள் / சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இலவம்பஞ்சு, பருத்தி பஞ்சு, சோளி வைத்து பூஜை
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இலவம்பஞ்சு, பருத்தி பஞ்சு, சோளி வைத்து பூஜை
ADDED :1330 days ago
காங்கேயம்: சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோளி வைத்து பூஜை செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள, சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. பக்தர்களின் கனவில் சுப்பிரமணியசுவாமி தோன்றி, குறிப்பிடும் பொருள் இந்த பெட்டியில் வைத்து, நுாற்றாண்டு காலமாக பூஜை செய்யப்பட்டு வருகிறது. பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதுமில்லை. அடுத்த பொருள் வரும் வரை இடம் பெறும்.