அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர உற்சவ விழா நிறைவு
ADDED :1624 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர உற்சவ விழா நிறைவடைந்தது. விழாவின் நிறைவு நாளில் பாலிகை விடுதல் நிகழ்ச்சியில், தாமரை குளக்கரை அருகே உள்ள மண்டபத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.