உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்!

கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்!

பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா, இம்மாதம் 9ல் கொடியேற்றத்துடன்  துவங்கியது.பத்து நாட்கள் திருவிழாவில் அம்மனுக்கு தினமும் சந்தனம், பன்னீர் உட்பட சகல அபிஷேகங்கள் மற்றும் திருக்கண் அபிஷேகங்கள் நடந்தது. இரவில்  அம்மன் சிம்மம், யானை, அன்னபட்ஷி, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்தார். கடைசி திருவிழாவான நேற்று, நூற்றுக்கணக்கானோர் தீச்சட்டி மற்றும் ஆயிரம் கண்பானை எடுத்து அம்மனை வழிபட்டனர்.வரும் 24ல் மறுபூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுதா மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !