உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயிலில் தங்கரதப் புறப்பாடு: பக்தர்கள் தரிசனம்!

பழநி மலைக்கோயிலில் தங்கரதப் புறப்பாடு: பக்தர்கள் தரிசனம்!

பழநி : ஆடி அமாவாசையை முன்னிட்டு பழநிமலைக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன, விழாவை முன்னிட்டு நடந்த தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். ஆண்டு பராமரிப்பு பணிக்காக பழநி கோயில் "ரோப்கார் நாளை (ஜூலை 20) முதல் நிறுத்தப்படுகிறது. கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது: அர்ச்சனை கட்டனம் ரூ.1,100 வசூல் செய்யப்படுகிறது. உச்சிகாலத்தில் மகா சங்கல்பம் செய்து, விபூதி, குங்கும பிரசாதத்துடன், ராஜ அலங்கார படம் தரப்படும். பஞ்சாமிர்த அபிஷேக கட்டளை ரூ.1,500. ஆண்டிற்கு ஒருமுறை பஞ்சாமிர்தம், விபூதி, குங்குமம், உச்சிகாலத்தில் மகா சங்கல்பம் செய்து ராஜ அலங்கார படம் அனுப்பி வைக்கப்படும். மலைக்கோயிலில் சிறப்பு பூஜை செய்தல், தங்கத்தேர் இழுக்க பணம், ரூம் புக் செய்தல் போன்றவை ஆன்-லைனில் புக் செய்யும் வசதி விரைவில் ஏற்படுத்தி தரப்படும். இரண்டாம் ரோப்கார் திட்ட மதிப்பீடு ரூ.18 கோடி. ஒரு மணிக்கு 1,500 பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. அறநிலையத்துறை கமிஷனரிடம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பராமரிப்பு: ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணி நாளை துவங்குகிறது. பணிகள் முடிந்து ஆக.,17ல் சோதனை ஓட்டம் நடத்தப்படும். ஆக.,20ல் மீண்டும் ரோப்கார் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !