பழமையான சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
ADDED :4870 days ago
பழநி: பழநி அருகே சோழர்கால கல்வெட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இரவி மங்கலக்குளக்கரையில் அழிந்து போன சிவன்கோயில் உள்ளது. இந்தக் கோயிலை புதுப்பித்து கட்டும்பணி துவங்கியுள்ளது. இதற்காக வாணம் தோண்டினர். கல்வெட்டுகள், செங்கற்கள் கிடைத்தன. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, பழனியாண்டவர் பெண்கள் கல்லூரி பேராசிரியர் திலகவதி, மாணவி கோமதி ஆய்வு செய்தனர். கி.பி.11 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி புரிந்த விக்கிரம சோழனின் கல்வெட்டுகள் என தெரிய வந்தது. நாராயண மூர்த்தி கூறுகையில்,""ஒரு கல்வெட்டில் யாழி படம் பொறிக்கப்பட்டுள்ளது. "பிஸ்கட் வடிவிலான பழமையான செங்கற்கள் சோழர் காலத்தை சேர்ந்தவை. இதனை "சித்து கல் என்பர், என்றார்.