உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான சுவாமி சிலைகள் மீட்பு

முத்துமாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான சுவாமி சிலைகள் மீட்பு

மேலுார்:  முத்துமாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான கோயிலில் மார்ச் 9, 15 ஆகிய இரண்டு நாட்கள் கோயிலின் பாதுகாப்பு அறையில் இருந்த வெண்கலத்தால் ஆன சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் திருடு போனது. இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில், எஸ்.ஐ.,கமல முத்து, தனிப்பிரிவு எஸ். ஐ., முத்துக்குமார் மற்றும் போலீசார் இரவு வாகன சோதனையின் போது யூனியன் அலுவலகம் எதிரே சந்தேகப்படும்பட்டி நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர் ராஜபாளையத்தை சேர்ந்த பொன்னுச்சாமி 62, என்பதும் சிலைகளை திருடியதை ஒப்புகொண்டார். போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒன்றரை அடி உயரமுள்ள முருகன், தலா ஒரு அடி உயரமுள்ள வள்ளி, தெய்வானை சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !