உத்தரகோசமங்கை கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :1260 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சன்னதி முன்புறம் உள்ள சேத்திர கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு வெற்றிலை அணிவிக்கப்பட்டது.* மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிறவல்லி அம்மன் கோயிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நெய் விளக்கேற்றினர்.