மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் காலபைரவர் சிறப்பு வழிபாடு
ADDED :1323 days ago
சோழவந்தான்: திருவாலவாயநல்லுரர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை பூஜாரி கணேசன் மற்றும் கிராமத்தினர் செய்தனர். தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோயிலில் பட்டர் செந்தில், குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் நிறுவனர் கோபிநாத், காலபைரவருக்கு சிறப்பு பூஜைகளை செய்தனர். பக்தர்கள் ஐந்து வகை எண்ணெய்களில் விளக்கேற்றி வழிபட்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.