முருகவேள் பன்னிரு திருமுறைகள்
சிவபெருமானுக்கு பன்னிரு திருமுறைகள் இருப்பது போல முருகனுக்கும் உண்டு. இதை முருகவேள் பன்னிரு திருமுறைகள் என்பர். தொகுத்தவர் தேனுார் வரகவி சொக்கலிங்கம்.
முதல் திருமுறை – திருப்பரங்குன்றம் திருப்புகழ்
இரண்டாம் திருமுறை – திருச்செந்துார் திருப்புகழ்
முன்றாம் திருமுறை – திருவாவினன்குடி திருப்புகழ்
நான்காம் திருமுறை – திருவேரகம் திருப்புகழ்
ஐந்தாம் திருமுறை – திருத்தணி திருப்புகழ்
ஆறாம் திருமுறை – சோலைமலை திருப்புகழ்
ஏழாம் திருமுறை – மற்ற முருகன் தலங்களுக்குரிய திருப்புகழ்
எட்டாம் திருமுறை – கந்தர் அலங்காரம், கந்தரந்தாதி
ஒன்பதாம் திருமுறை – திருவகுப்பு
பத்தாம் திருமுறை – கந்தரனுபூதி
பதினோராம் திருமுறை – சங்க இலக்கியம் முதல் பிற்கால இலக்கியம் வரையுள்ள முருகன் பாடல்கள்.
பன்னிரண்டாம் திருமுறை – அருணகிரிநாதர், அகத்தியர், நக்கீரர் முதலான 41 அடியார்களின் வரலாற்றை விளக்கும் சேய்த்தொண்டர் புராணம்