திருவல்லிக்கேணி பிரம்மோற்சவ விழா: தேரோட்டம் கோலாகலம்
ADDED :1322 days ago
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் நரசிம்மர் பிரமோற்சவத்தில், தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழா 20ம் தேதி தொடங்கியது. விழாவில், தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி புறப்பாடு நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, இன்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. அதிகாலை 2.15 மணிக்கு திருத்தேருக்கு எழுந்தருளினார். காலை 7 மணிக்கு பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 9 மணிக்கு தோட்டத் திருமஞ்சனம் நடக்கிறது.