உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துளசியின் மகத்துவம்

துளசியின் மகத்துவம்


துளசி இருக்குமிடத்தில் எல்லா தெய்வங்களும் குடியிருக்கும். துளசி காற்று நம் மீது பட்டால் பாவம் தீரும். துளசியை சாப்பிட நோய்கள் தீரும். துளசி இருக்கும் வீட்டில் அகால மரணம் ஏற்படாது. தினமும் திருமாலுக்கு துளசி சாத்தி  வழிபட்டால் மறுபிறவி உண்டாகாது. அனுமன் இலங்கையில் சீதையைத் தேடி அலைந்த போது மாளிகை ஒன்றில்  துளசி மாடம் இருப்பதைக் கண்டார். அங்கு விசாரித்த போது விபீஷணன் மாளிகை என்பது தெரிந்தது.
துளசிபூஜை செய்ததன் பயனாக ராமரை கணவராக அடையும் பாக்கியம் சீதைக்கு கிடைத்தது. பெருமாள் கோயிலில் தீர்த்தத்துடன் துளசி பிரசாதம் பெறுவது சிறப்பு. இதனைச் சரணாமிர்தம், தீர்த்த பிரசாதம், பெருமாள் தீர்த்தம் எனக் குறிப்பிடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !