உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலம் மாறும்.. கவலை தீரும்!

காலம் மாறும்.. கவலை தீரும்!


ஊக்கப்படுத்துகிறார் பாரதியார்

* காலம் ஒருநாள் மாறும். உன் கவலைகள் யாவும் தீரும்
* தர்மத்தால் பெறும் வெற்றியே என்றும் நிலைத்து நிற்கும்.
* மனதில் கருணை இருந்தால் மட்டுமே கடவுளின் அன்பை பெறலாம்.
* உயிர்கள் மீது இரக்கம் காட்டுவதே தர்மங்களில் மேலானது.
* மலர்ந்த முகமும், இனிய சொல்லும் தான் இன்பமாக இருப்பதற்கு வழி.
* பள்ளி, தொழிற்சாலை அதிகமானால் சிறைச்சாலை குறைந்து விடும்.
* ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய். இதுவே தானத்தில் சிறந்தது.
* உனக்கு உதவி செய்ய எவ்வளவு பேர் இருந்தாலும் சுயபுத்தியை வளர்த்துக்கொள்.
* சென்றதை நினைத்து வருந்தாதே. இனி நடக்கப்போவதில் கவனம் செலுத்து.
* ஆணும் பெண்ணும் குடும்பமாக இணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை.   
* அறிவு தேடலை நிறுத்தாதே. தொடர்ந்து பணி செய்.
* சொல்வது யாருக்கும் எளிது. ஆனால் அதன்படி நடப்பது கடினம்.
* உலகில் தர்மம் இருக்கும் வரையில் அதர்மமும் இருந்தே தீரும்.  
* ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும் உன் கையில்தான் உள்ளது.
* தவறு செய்துவிட்டேனே என வருந்தாதே. இனியும் அதை செய்யாமல் இரு.
* பல கஷ்டங்களை சந்திக்கும்போதுதான் உனக்கு பல உண்மைகள் புரியவருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !