உண்மையான தலைவன்
* மக்களுக்கு உண்மையாக சேவை செய்பவரே தலைவன்.
* பொருளின் மீது அதிகமாக ஆசைப்படாதீர்கள்.
* எல்லோருக்கும் ஒவ்வொரு பொறுப்பு தரப்பட்டுள்ளது. அதை சரியாக செய்யுங்கள்.
* தீய குணம் கொண்டவர்களுடன் பழகுவதைவிட தனியாக இருங்கள்.
* உங்களின் செயல்முறைக்கேற்ப இறப்புக்கு பிந்தைய வாழ்வு அமையும்.
* குறைந்த வருமானத்தில் நிறைவான வாழ்க்கை வாழ்பவர்கள் சிறப்பானவர்கள்.
* நீ செய்த பாவங்களை நினைத்து கண்ணீர் சிந்து. நல்லதை செய்.
* குற்றமற்ற பணியாளரின் மீது வீண்பழி சுமத்துபவன், மறுமை நாளில் சவுக்கால் அடிக்கப்படுவான்.
* முதலில் வலது காலில் செருப்பை அணியுங்கள்.
* குடும்பத்தினரை அலட்சியம் செய்தால் சுகமான வாழ்வை இழக்க நேரிடும்.
* கொடையாளியின் உணவு மருந்தாகும். கஞ்சனின் உணவு நோயாகும்.
* சொர்க்கத்திலிருந்து மண்ணுலகிற்கு வந்தது அத்திப்பழம். இது மூல வியாதியை குணமாக்கும்.
– பொன்மொழிகள்