மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
1262 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
1262 days ago
மேலச்சேரி ஆதி திரவுபதியம்மன் கோவிலில் ஜெயந்தி விழா
1262 days ago
மயிலாடுதுறை: மயிலாடுதுறை, பிரசித்திபெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை துவங்கியது. விழா நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பக்தர்கள் https://player.e2is.in/playspl.php?str=live லிங்கை கிளிக் செய்து தரிசனம் செய்யலாம்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இத்தலத்தில் 60, 70, 80, 90, 100 ஆகிய வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் இருபத்தைந்தாவது குருமகாசந்நிதானம் ஆட்சி காலத்தில் 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது அதனை எடுத்து 26வது குருமகா சன்னிதானம் ஆட்சிக் காலத்தில் 1997ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் செய்யப்பட்டு நாளை (27ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதையொட்டி 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால பூஜைகள் நடைபெறகிறது. நாளை (மார்ச் 27 ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை தசமி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்த யோகம் ரிஷப லக்னத்தில் காலை 10 மணி முதல் 11:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது அதையொட்டி 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால பூஜைகள் நடைபெறகிறது. 120 வேத விற்பன்னர்கள் 27 திருமுறை ஓதுவார்கள் திருமுறை பாராயணம், அபிராமி அந்தாதி பாராயணம், மிரித்திங்கா ஜெபம் ஆகியவைநடக்கிறது. விழா நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பக்தர்கள் https://player.e2is.in/playspl.php?str=live லிங்கை கிளிக் செய்து தரிசனம் செய்யலாம்.
1262 days ago
1262 days ago
1262 days ago