உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயில் மண்டலாபிஷேக விழா

எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயில் மண்டலாபிஷேக விழா

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் மண்டலாபிஷேக விழா நடந்தது.

எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த பிப்., 6 ல் கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் நேற்று நிறைவடைந்து. அதன்படி நேற்று காலை 7:00 மணிக்கு அனுக்கையுடன் விழா துவங்கியது. பின்னர் காலை 9:00 மணிக்கு மஹா பூர்ணாகுதி நிறைவடைந்து. பின்னர் மண்டலசாந்தி, விசேஷ திருமஞ்சனம் நடந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நாளை காலை 9:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடக்கிறது. இதேபோல் மார்ச் 29, 30, 31 ஆகிய நாட்களில் தினமும் பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள், அலமேலுமங்கை பத்மாவதி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம், ஆண்டாள் நாச்சியார் சமேத வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடக்க உள்ளது. மேலும் நான்கு நாட்களும் அன்னதானம் நடக்க உள்ளது. ஏப்., 1 அன்று காலை சக்கரத்தாழ்வார் அபிஷேகம், மாலை கருட வாகனம், யானை, அன்னம், புஷ்ப பல்லக்கு என சுவாமி, தாயார் வீதி வலம் வருகின்றனர். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !