ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோவில் மகா சாந்தி ஹோமம்
ADDED :1325 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி மஹா சாந்தி ஹோமம் நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த ஆதிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் திருப்பணி முடிந்து பல ஆண்டுகள் ஆவதால், திருப்பணி துவங்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் நேற்று முன்தினம் மஹாசாந்தி ஹோமம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு துவங்கி, நான்கு கால பூஜைகளுடன் நேற்று நிறைவடைந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த ஹோமத்தில் கோவில் பட்டாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க முன்னின்று நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.