திருப்பரங்குன்றம் கோயிலில் சாந்தாபிஷேகம்: மலர் அலங்காரத்தில் சுவாமி
ADDED :1624 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு உற்சவ சாந்தி அபிஷேகம், பூஜை நடந்தது. கோயில் திருவாட்சி மண்டபத்தில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். சுவாமி முன்பு தங்கம், வெள்ளி குடங்களில் புனித நீர் நிறைப்பி பூஜை நடந்தது. 16 வகையான அபிஷேகங்கள் முடிந்து சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க குடம், தெய்வானைக்கு வெள்ளிக்குடங்களில் இருந்த புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. மலர் அலங்காரத்தில் ஆஸ்தான மண்டபம் வலம் சென்று அருள்பாலித்தனர்.