திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோயிலில் உழவாரப்பணி
ADDED :1328 days ago
திருவள்ளூர்: தமிழகமெங்கும் பிரதி மாதம் 4 வது ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் கடந்த 27 ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, காலை 7.00 மணி முதல் மாலை 4 மணி வரை திருவள்ளூர், திருப்பாச்சூர், வாசீஸ்வரர் கோயிலில், கோயில் இணை ஆணையர் A.T. பரஞ்ஜோதி தலைமையில் உழவாரப் பணி சிறப்பாக நடந்தது. தொடர்ந்து கோயில் வெளி பிரகாரத்தில் பக்தகோடிகளிடையே, திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க, திருமுறை ஈசனை சுமந்து, திருமுறைகள் பாடி, அடியார்கள் புடை சூழமக்களிடையே திருக்கோயில்களின் தூய்மை - நலன் - பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திருவீதிவுலா நடைபெற்றது.