உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

காரைக்குடி: காரைக்குடியில் உள்ள பெரிய முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காரைக்குடியில் உள்ள பெரிய முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு கடந்த மார்ச் 22 ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தினமும் அம்மன் சிறப்பு வாகனங்களில் அருள்பாலித்தார். முக்கிய விழாவான பால்குட திருவிழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் முளைப்பாரி திருவிழா நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !