உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெனக நாராயணப் பெருமாள் கோயில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம்

ஜெனக நாராயணப் பெருமாள் கோயில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றம்

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கோயில் பிரமோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கோயில் யாகசாலை அரங்கில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் சுவாமிக்கு வரதராஜ பண்டிட் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தார். கருட உருவம் பொறித்த கொடியை பக்தர்கள் சுமந்து ரதவீதிகளில் சுற்றி கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். ரகுராம் பட்டர் வேதமந்திரங்கள் முழங்க கோயில் கம்பத்தில் கொடியேற்றம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !