உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாமோதர பெருமாள் கோவிலில் ராமாயண உபன்யாசம் துவக்கம்

தாமோதர பெருமாள் கோவிலில் ராமாயண உபன்யாசம் துவக்கம்

வில்லிவாக்கம்:பழமை வாய்ந்த சவுமிய தாமோதர பெருமாள் கோவிலில், ஸ்ரீ ராமநவமி திருவிழாவை முன்னிட்டு, இன்று முதல் 10 நாட்களுக்கு, ராமாயண உபன்யாசம் நடைபெறுகிறது.

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சவுமிய தாமோதர பெருமாள் கோவில், 800 ஆண்டுகள் பழமைவாய்ததது.ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் ராமாயண உபன்யாசம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு ஸ்ரீ ராமநவமி திருவிழாவை முன்னிட்டு, உ.வே.பள்ளிக்கரணை திருமாலை நாடாதுார் சேஷாத்ரி சுவாமி தலைமையில், ராமாயண உபன்யாசம் இன்று துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது. இந்த உபன்யாசம் தினமும், மாலை, 7:00 - 8:15 மணி வரை, தொடர்ந்து 10ம் தேதி வரை நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !