திருப்புல்லாணியில் ராமாயண மகா வேள்வி: ஏப்., 6 முதல் 9 வரை நடக்கிறது
ADDED :1365 days ago
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் முன்புறம் உள்ள சக்கர தீர்த்தம் அர்த்தமண்டபத்தில் ஸ்ரீமத் ராமாயண மஹா (யக்ஞம்) வேள்வி நடக்க உள்ளது.
வரும் ஏப்., 6 முதல் 9 வரை 4 நாட்களுக்கு திரிதண்டி ஸ்ரீராமானுஜர் சின்ன ஜீயர் சுவாமிகள் தலைமையில் ஸ்ரீமத் ராமாயண மகா வேள்வி நடக்கிறது. இதில் உபன்யாசம், சத்சங்கம், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள், வேதபாராயணம் உள்ளிட்டவைகள் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், ஜெயராம் பட்டர், எம்பெருமான் டிரஸ்ட், திருக்கோஷ்டியூர் மாதவன் சுவாமிகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.